விரைவில் இலங்கையில் நீண்டகால போர் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஒரு மாதத்தில் தயாராகிவிடும் அந் நாட்டு அரசியல்சட்ட விவகார அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கூறினார்.
வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி இப்போதைய தாற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரும். இதையடுத்து மீண்டும்இந்தப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும். இது குறுகிய காலத்துக்கான போர் நிறுத்த நீட்டிப்பாக இருக்காது.நீண்டகாலத்துக்கான, நிரந்தர போர் நிறுத்தமாக இருக்கும். இது தொடர்பாக இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும்.
நீண்டகால போர் நிறுத்தத்தை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து நார்வே தூதுக்குழு மூலமாக இரு தரப்பினரும்விவாதித்து வருகின்றனர். இந்தப் பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும் ஒரு முடிவெடுக்கப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications