அமெரிக்காவில் சட்டவிரோதமாக 2 லட்சம் இந்தியர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கியுள்ளதாக ஒருபுள்ளிவிவரம்தெரிவித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புதான் இந்தப் புள்ளிவிவரத்தை தெரிவித்துள்ளது.
40,000 பாகிஸ்தானியர்கள், 1,14, 818 அரபு நாட்டினர், 30,823 ஈரானியர்கள் மற்றும் 2,26,886 சீன-தைவான்மக்கள் உள்பட மொத்தம் 13,63,419 ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத்தங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் பக்கத்து நாடுகளான வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து 53,12,090 பேரும், தென்அமெரிக்காவிலிருந்து 6,24,419 பேரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாகவும் அந்தப்புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
இவர்களைத் தவிர ஐரோப்பாவிலிருந்து 11,13,683 பேரும் ஆப்பிரிக்காவிலிருந்து 2,43,342 பேரும்அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகவும் அமெரிக்க சென்சஸ் பியூரோ கூறியுள்ளது.
அமெரிக்காவில் இவ்வளவு பேர் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதால் அந்நாடு மிகவும் கவலையடைந்துள்ளது.
இந்த சென்சஸ் நிறுவனம் இப்போதுதான் முதன் முறையாக சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரைப்பற்றிய கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இதையடுத்து இத்தகைய வெளிநாட்டினரை நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியில் அமெரிக்கா தீவிரமாகஈடுபட்டுள்ளது.
இனி எச்1-பி விசாக்கள் பெருமளவில் குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் தற்காலிகமாகவேலைக்காகவோ அல்லது பயிற்சிக்காகவோ வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மிகவும் குறையும் என்றுஅமெரிக்கா எதிர்பார்க்கிறது.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருமே மத்திய கிழக்குநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள்தான். இதையடுத்து 6,000 அரபு முஸ்லிம்களை வெளியேற்ற அமெரிக்காஏற்கனவே முடிவு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications