காணாமல் போன மாஜி எம்.எல்.ஏ.: ஆளுநரிடம் குடும்பத்தினர் புகார்
சென்னை:
காணாமல் போன முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் தமிழக ஆளுநர்ராமமோகன் ராவிடம் மனு கொடுத்தனர்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போதைய திமுக பிரமுகருமான பாலன் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதிவழக்கம் போல் வாக்கிங் சென்றவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை.
அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான் கைது செய்திருப்பதாக திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகுபாலனின் மகன் போலீசில் தனது தந்தையை மீட்டுத் தருமாறு புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பிறகு அதிமுக மேலிடத்தின் உத்தரவின் பேரில் தனது தந்தையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்திருப்பதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும்பாலனின் மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார்.
ஆனால் உயர் நீதிமன்றம் இந்த மனுவின் மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பாலனின் குடும்பத்தினர் ராஜ்பவனுக்குச் சென்று தமிழக ஆளுநர்ராமமோகன்ராவிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
கடந்த ஒரு வாரமாக போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாலனை விரைவில்மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் இந்த மனுவில் பாலனுடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிறகு நிருபர்களிடம் பேசிய பாலனின் மகன் மணிமாறன், இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகஆளுநர் கூறியதாக தெரிவித்தார். அருகில் இருந்த பாலனின் மனைவி சரளா கண் கலங்கி அழுது கொண்டிருந்தார்.
திமுக எம்.பியான குப்புசாமி உள்பட சில திமுகவினரும் பாலன் குடும்பத்தினருடன் ஆளுநரைச் சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications