ஆண்டிப்பட்டி தேர்தல்: தேர்தல் கமிஷன் மீது பாஜக அதிருப்தி
நாகர்கோவில்:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் நடந்து கொண்ட விதம் சரியில்லை. தேர்தல் கமிஷன்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
நாகர்கோவிலில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் விஷயத்தில் தேர்தல் கமிஷன் நடந்து கொண்ட விதம் பாஜகவுக்கு திருப்திஅளிக்கவில்லை. தேர்தல் கமிஷனில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என உள்துறை அமைச்சர் அத்வானிகூறியுள்ளார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் 14,000 கள்ள ஓட்டுகளை கண்டுபிடித்த தேர்தல் கமிஷன்,ஆண்டிப்பட்டியில் மட்டும் கள்ள ஓட்டுகளை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது யாருக்கும் புரியாத புதிராகஉள்ளது.
ஆண்டிப்பட்டியில் அதிகார துஷ்பிரயோகமும், தேர்தல் விதிமுறைகள் மீறலும் அதிகம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, தேர்தல் கமிஷன் தேர்தலை முறையாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது ஆரோக்கியமான முடிவு அல்ல. அரசியல்கட்சிகள் தனது ஜனநாயக கடமையில் இருந்து தவறுவது நல்லதல்ல.
தற்போதுள்ள சூழலில் மாநில அரசு ஸ்தம்பித்துள்ளது. முக்கிய முடிவுகளை யார் எடுப்பது என தெரியாமல்அமைச்சர்களே தவிக்கின்றனர்.
இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுடனும் பாஜகவுக்கு நல்லுறவு இருந்து வருகிறது. அந்த வகையில்அதிமுகவுடனும் நல்ல உறவு நீடித்து வருகிறது. இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவு. கூட்டணிஉறவு என்பது வேறு என்று இல.கணேசன் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications