திண்டுக்கல், நெல்லையில் பஸ்களுக்கு தீ வைப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு கும்பல் டவுண் பஸ்சுக்குத் தீ வைத்துவிட்டுஓடிவிட்டது.
திண்டுக்கல்லிலிருந்து செந்துறைக்கு இன்று அதிகாலை 6 மணிக்கு ஒரு டவுண் பஸ் சென்று கொண்டிருந்தது.புகையிலைப் பட்டி அருகே இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அதைநிறுத்தினார்கள். அவர்களும் பயணிகள்தான் என்று நினைத்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
ஆனால் பஸ்சில் ஏறிய அந்த 5 பேரும் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு டிரைவர்-கண்டக்டர் மற்றும்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர் பஸ்சிலிருந்து அனைவரையும் கீழே இறக்கிவிட்டு, பஸ்சில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டுஓடிவிட்டனர்.
இதில் பஸ்சின் பெரும்பாலான பகுதி எரிந்து சாம்பலாகிவிட்டது. இதுகுறித்து பேலீசார் விசாரணைை நடத்திவருகின்றனர்.
நெல்லையிலும் பஸ் எரிப்பு:
இதற்கிடையே நேற்று இரவு திருநெல்வேலி அருகே மற்றொரு பஸ் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திருநெல்வேலியிலிருந்து திசையன்விளையை நோக்கி இந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்குள்அமர்ந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று எழுந்து, பயங்கரமான ஆயுதங்களால் பயணிகளை மிரட்டியது.
பின்னர் பஸ்சை நிறுத்தவைத்த அந்தக் கும்பல், பஸ்சுக்குத் தீ வைத்துவிட்டு ஓடியது. அப்போது அந்த வழியாகவந்த மற்றொரு ஆம்னி பஸ்சின் ஜன்னல்களையும் தாக்கி உடைத்துவிட்டு அந்தக் கும்பல் ஓடிவிட்டது.
ஜான் பாண்டியன் கைது காரணமா?
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் சமீபத்தில் ஒரு கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.
இதை எதிர்த்துத்தான் அக்கட்சித் தொண்டர்கள் இவ்வாறு பஸ்கள் எரித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
பழனி அருகே நேற்றும் ஒரு பஸ் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications