நாளை குடியரசு தினம்: சென்னையில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
53 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சென்னையில்ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய கட்டடங்களில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை பற்றி தமிழக டி.ஜி.பி. நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதனால் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் சென்னை மெரீனா கடற்கரையைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கானபோலீஸ்காரர்கள் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மெரீனா கடற்பகுதி முழுவதும் 24 மணி ரோந்துப் பணி நடைபெறும். கடற்கரைச் சாலை முழுவதும்ஆங்காங்கே ரகசிய காமிராக்கள் மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போலீசார் மப்டியில் பொதுமக்களோடு கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
அப்பகுதியில் உள்ள உயரமான கட்டடங்களிலிருந்து குடியரசு தின அணிவகுப்பைக் கண்காணிக்கும் பணியிலும்போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கார் நிறுத்தப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று நெய்வால் கூறினார்.
15 தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவியிருப்பதாக வந்த தகவல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, இது பற்றி எனக்குஎந்த தகவலும் வரவில்லை என்றும் நெய்வால் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications