நம்மிடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன: அப்துல் கலாம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

நம் நாட்டிள்ள போதுமான ஆயுதங்களைக் கொண்டு எந்த பிரச்சனையையும் நாம் சமாளிக்கலாம் என்று மத்தியஅரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள இன்டர் டேட்டா மையத்தை தொடங்கி வைத் கலாம் பேசியதாவது:

நான் கடந்த ஆகஸ்டு முதல் இந்தியா முழுவதும் பல்வேறு மாணவர்களை சந்தித்து பேசி வருகின்றேன். இதுவரை20,000 மாணவர்களைச் சந்தித்து பேசியுள்ளேன். வரும் ஆகஸ்டுக்குள் ஒரு லட்சம் மாணவர்களை சந்தித்துவிடுவேன்.

மாணவர்களின் சிந்தனைகளை எனது எண்ணங்களுடன் ஒருங்கிணைக்க விரும்புகிறேன். இதன் மூலம் புதியஇந்தியாவை உருவாக்க வேண்டும்.

உலக நாடுகளில் இந்தியா முன்னிலை பெற வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்க வேணடும்.

தற்போது உள்ள பாடத்திட்டம் திருப்தி தருவதாக இருந்தாலும் அது மட்டுமே முக்கியமில்லை. பாடத்திட்டம் மூலம்ஆசிரியர்கள் புதிய சிந்தனையை மாணவர்களிடம் தூண்ட வேண்டும்.

நம்மிடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன. இதன் மூலம் எப்பிரச்சனையையும் சமாளிக்க முடியும். ஆனால் நாம்நம் பலத்தை உணராமல் இருக்கிறோம் என்று அப்துல் கலாம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+