ஆண்டிப்பட்டி தேர்தல்: 3 சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 33 வேட்பு மனுக்களில் 3 சுயேச்சைகளின் மனுக்கள்நிராகரிக்கப்பட்டன.
ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 17ம் தேதி துவங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக சார்பில் வைகை சேகர், மதிமுக சார்பில்ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் உள்பட 33 பேர்வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வேட்புமனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பரிசீலிக்கப்பட்டன.
இவற்றில் புதிய தமிழகம் கட்சியின் மாற்று வேட்பாளரான வேலுச்சாமி, கோயம்புத்தூர் சிறையில் கைதியாக உள்ளசண்முகராஜன் மற்றும் துவாரகநாதன் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை ஆண்டிப்பட்டி தொகுதிதேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
முறையான ஆவணங்களை இவர்கள் சமர்ப்பிக்காததால் இந்த 3 மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக அவர்தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் மனு உள்பட மற்ற 30 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இம்மாதம் 28ம் தேதி கடைசி நாளாகும்.
அடுத்த மாதம் 21ம் தேதி இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கைதுவங்குகிறது. அன்றே முடிவுகளும் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications