திமுக தொடர்ந்த வழக்கால் ஆண்டிப்பட்டி தேர்தலுக்கு பாதிப்பில்லை: பன்னீர்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அத்தொகுதியின் திமுக வேட்பாளர்தொடர்ந்துள்ள வழக்கால் தேர்தல் பாதிக்கப்படாது என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதால், அவற்றைக் களையும் வரைஅங்கு இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அத்தொகுதி வேட்பாளரான வைகை சேகர் டெல்லிஉயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கலும் இன்றோடு முடியப் போகிறது.
இந்நிலையில் திமுக தொடர்ந்துள்ள வழக்கால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது.
மேலும் ஆண்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியல் முறைகேடு நடக்கவில்லை. எனவே எத்தனை தடைகள் வந்தாலும்ஆண்டிப்பட்டி தேர்தலைத் தடுத்து நிறுத்த முடியாது.
திமுக தொடர்ந்துள்ள இந்த வழக்கால் ஆண்டிப்பட்டி தேர்தலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.
இத்தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது உறுதிஎன்று பன்னீர்செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications