அக்னி சோதனை: பாகிஸ்தான் எதிர்ப்பு, ரஷ்யா ஆதரவு
இஸ்லாமாபாத்:
இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய அக்னி ஏவுகணை சோதனை 2 நாடுகளுக்கும் இடையிலானஅமைதியையும் இந்த மண்டலத்தின் ஸ்திரத்தன்மையையும் மேலும் குறைத்துவிட்டது என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கையைக் கவனித்து கண்டிக்க வேண்டும் என்றும்பாகிஸ்தான் பிற நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் யாரையும் பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கில் அக்னி ஏவுகணை சோதனையை நடத்தவில்லை என்றும்பாகிஸ்தானிடம் தெரிவித்த பின்னர்தான் இந்தச் சோதனையை நாங்கள் நடத்தினோம் என்றும் இந்தியாகூறியுள்ளது.
ரஷ்யா ஆதரவு
அதே நேரத்தில் இந்தியா நடத்திய அணுகுண்டு ஏந்திச் செல்லும் புதிய அக்னி ஏவுகணைச் சோதனையை ரஷ்யாஆதரித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக உயரதிகாரி கூறுகையில்,
இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப் போவது குறித்து எங்களிடம் தான் இந்தியா முதலில் தெரிவித்தது. மிகுந்தஅவசியம் ஏற்பட்டதால் தான் இச் சோதனையை இந்தியா நடத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.
இந்தியாவின் நிலையை நாங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறோம். இந்தச் சோதனையை இந்தியாவெளிப்படையாகத் தான் நடத்தியுள்ளது. இந்தியர்கள் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
இச் சோதனை மூலம் இந்தியா எந்த சர்வதேச விதிகளையும் மீறவில்லை என்றார்.
தனது பாதுகாப்புக்காகத் தான் இந்த ஏவுகணைச் சோதனையை இந்தியா நடத்தியுள்ளது, பாகிஸ்தானைமிரட்டுவதற்காக அல்ல என ரஷ்ய அரசின் ஆர்.டி.ஆர். டிவியும் அரசு ரேடியோவான மாயக்கும் கூறியுள்ளன.
மேலும் பல சோதனைகளை இந்தியா நடத்தவுள்ளது எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications