பிரச்சனையில் சிக்கிய இந்திய, பாக் ராணுவ விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி & இஸ்லாமாபாத்:

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா இந்திய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஒரு ஆளில்லா உளவு விமானம் இன்று(வெள்ளிக்கிழமை) பறந்து கொண்டிருந்தது.

தொலை தூரத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த விமானத்தில் திடீரென்றுதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானம் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டது என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.

கடலில் நொறுங்கிய பாக். விமானம்:

இதற்கிடையே பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த ஒரு ஜெட் விமானம் இன்று காலை அரபிக் கடலில்நொறுங்கி விழுந்தது.

வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெடு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்துஅதைத் தேடி பல ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்தன. ஆனால், விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கராச்சிக்கு அருகே கேமாரி துறைமுகத்தை ஒட்டிய அரேபியக் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது. அதை ஓட்டிச் சென்ற விமானியின் கதி என்ன என்றும் தெரியவில்லை.

பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான இந்த மிராஜ் ரக விமானத்தைத் தேடும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+