சந்தன வீரப்பனை பிடிக்கும் பணி மீண்டும் தீவிரம்
சேலம்:
கூட்டாளிகளோடு வீரப்பன் சரணடைய நேற்று (வியாழக்கிழமை) வரை கொடுத்திருந்த கெடு முடிந்ததால்,தமிழக-கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பனை பிடிக்கும் பணியை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், எதிர்க் கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்கச்செய்ய வீரப்பன் சரணடையச் செய்யும் திட்டமே சரியான அஸ்திரம் என அரசு முடிவு செய்தது.
இதையடுத்து வீரப்பனை சரணடைய செய்ய 26ம் தேதி வரை அதிரடிப்படைக்கு தமிழக அரசு கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் மாதேஸ்வரன் மலையில் வீரப்பன் சரணடைய இருப்பதாக கூறப்பட்டது. அதனால்அதிரடிப்படையினர் மாதேஸ்வரன் மலையில் அவனுக்காக காத்திருந்தனர்.
இதற்கிடையே பூதி மலைப்பகுதியில் வீரப்பன் கூட்டாளிகளோடு பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்துஅப்பகுதியை ஒரு வாரத்துக்கு முன்னரே அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர்.
கூட்டாளிகளோடு வீரப்பனை சரணடைய செய்ய கொளத்தூர் மணி மூலம் பணிய வைக்க நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொளத்தூர் மணி சென்ற வாரம் பூதி மலைக்கு சென்று வந்துள்ளார்.
இதை கண்காணித்து வந்த தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையைச் சேர்ந்த 3,400 போலீசார் நவீனஆயுதங்களுடன் பூதி மலையில் தயார் நிலையில் உள்ளனர். நேற்று மாலை 6.30 வரை அவர்கள் வீரப்பனுக்கு கெடுவிதித்திருந்தனர்.
மேட்டூர், கொளத்தூர், பாலாறு, மாதேஸ்வரன் மலைப்பகுதிகளிலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வரை வீரப்பன் சரணடையாததால், வீரப்பனைப் பிடிக்க எந்நேரமும் அதிரடிப்படை காட்டுக்குள் நுழைந்துமீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications