சென்னை மருத்துவக் கல்லூரி டீன் திடீர் மரணம்: குடியரசு தினவிழாவில் கொடியேற்றியபோது பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொடியேற்றிய பின்,உறுதிமொழியை படித்துக் கொண்டிருந்த கல்லூரியின் டீன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

53வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதன் தலைவர்கள் கொடியேற்றினர்.

குடியரசு தின விழா நிகழ்ச்சி சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்கல்லூரியின் டீன் கேப்டன் முனிரத்னம் கொடியேற்றினார்.

பிறகு அவர் குடியரசு தின உறுதிப் பத்திரத்தை படித்துக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு,தரையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக்கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 55. இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும் டீனாக பதவிவகித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனையில் தான் முனிரத்தினத்தின் மனைவி சரோஜாவும் டாக்டராக பணியாற்றிவருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+