சென்னை ஐ.ஐ.டியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய ஊழியர் கைது
இடம்- சென்னை ஐ.ஐ.டி.
பெயர்- மகாதேவன்
கொடுக்கப்பட்ட வேலை- ஐ.ஐ.டியில் தாறகாலிக ஊழியர்
செய்த வேலை- ஐ.ஐ.டியில் டூ- வீலர்களை அபேஸ் செய்வது
சென்னை ஐ.ஐ.டியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல மோட்டார் சைக்கிள்கள் தொலைந்து போயின.
ஐ.ஐ.டி. முழுவதும் காவலர்களை நியமித்தும் கூட இந்தத் திருட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.
மாணவர்களின் பைக்குகள் மட்டுமின்றி, பேராசிரியர்களின் வண்டிகளும் திருடுபோய் வந்தன.
இதில் ஸ்கூட்டி போன்ற பெண்களின் வாகனங்களும் தப்பவில்லை. தொடர்ந்து ஐ.ஐ.டியில் இருந்து வந்த இந்தபுகார்களால் வெறுத்துப் போன போலீசார் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் திணறினர்.
இறுதியில் நிச்சயம் உள்ளுக்குள் இருக்கும் யாரோ தான் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக்கண்டுபிடித்த போலீசார் அவரை கையும் களவுமாய் பிடிக்க செயலில் இறங்கினர்.
தோட்டக்காரர்கள் போலவும், எலெக்ட்ரீசியன்கள் போலவும் மாறு வேடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்போலீசார்.
அப்போது சில நாட்களுக்கு முன் மகாதேவன் ஒரு வண்டியை ரொம்ப நேரமாய் பல சாவிகள் போட்டு ஸ்டார்ட்செய்ய முயற்சிக் கொண்டிருந்தார். அவரிடம் என்ன சார் பிரச்சனை? என்று விசாரித்த மாறுவேட போலீசிடமேகொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி கொடுங்க என்று கேட்க அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ்காரர் மகாதேவனை கையும்களவுமாகப் பிடித்தார்.
அவரிடம் இருந்து ஐ.ஐ.டி. ஊழியர்களுக்குச் சொந்தமான 6 மோட்டார் சைக்களிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் பல வண்டிக்களை விற்றுவிட்டார் மகா. அந்த வண்டிகளைக் கண்டுபிடித்துக் கைப்பற்றும் பணி நடந்துவருகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications