தமிழகத்தில் கோலகலமாய் நடந்த குடியரசு தின விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் குடியரசு தினவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைஅருகில் நடந்தது.

மோட்டார் சைக்கிள்கள் அணிவகுக்க ஆளுநர் ராம்மோகன் ராவ் காரில் வந்திறங்கினார். அவரை தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் வரவேற்றார். பிறகு முப்படைத் தள பதிகளையும் ஆளுநருக்கு முதல்வர் அறிமுகம் செய்துவைத்தார். இந்த விழாவில் தலைமைச் செயலர் சங்கர் உட்பட பல அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

பிறகு ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் வானில் இருந்து தேசியக்கொடிக்கு மலர்களைத் தூவியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

வீர தீர செயல்கள் புரிந்த 3 பேருக்கு அண்ணா விருதுகளும், கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது மதுரையைச்சேர்ந்த நவாப் ஜானுக்கும், கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சேர்நத 5பேருக்கு மகாத்மா காந்தி காவல் பதக்கங்களையும் முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். பீரங்கிகளும்அணிவகுத்து வந்தன.

இவர்களைத் தொடர்ந்து எல்லையோரக் காவல்படை வீரர்கள், ஊர்காவல் படையினர், என்.சி.சி.மாணவர்களும்அணிவகுப்பு நடத்தினர்.

பின்னர் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான கரகாட்டம்,ஒயிலாட்டம் உட்பட பல்வேறு நாட்டியங்கள், பல்வேறு மாநில கலாச்சார நடனங்களும் பள்ளி மாணவர்கள்நடத்தினர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் குடியரசு தின நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

இதேப்போல் தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் மாவட்டக் கலெக்டர்கள் கொடியேற்றினர்.

கட்சி அலுவலகங்கள்:

திராவிடக் கட்சிகள் தவிர பிற முக்கியக் கட்சி அலுவலகங்களிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன்கொடியேற்றினார். கட்சித் தலைவர் கிருபாநிதி உள்பட பல தொண்டர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

த.மா.கா. அலுவலகமான சாஸ்திரி பவனில் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தேசியக் கொடியேற்றி வைத்துமரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரான வாழப்பாடி ராமமூர்த்தி கொடியேற்றினார். சிலதினங்களுக்கு முன் கட்சியில் சேர்ந்த இவருக்கு கொடியேற்றும் வாய்ப்பைத் தந்து வழக்கமான காங்கிரஸ் கோஷ்டிபூசலுக்கு ஒரு முடிவு கட்டினார் கட்சியின் தலைவர் இளங்கோவன். இந் நிகழ்ச்சியில் குமரி அனந்தன் உள்படபலரும் கலந்து கொண்டனர்.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் அதன் மாநிலப் பொதுச் செயலாளர் நல்லகண்ணு தேசியக்கொடியேற்றி வைத்து மதவாதத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+