திருவையாறில் இன்று தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இன்று (திங்கள்கிழமை) 155-வது தியாகராஜர் ஆராதனை விழா தொடங்குகிறது.
திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகபிரம்ம சபை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கேரள நிதியமைச்சர் சங்கரநாராயணன் ஆராதனை விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், சபையின் அறங்காவலருமான ஜி.கே.வாசன், சபாவின் தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், செயலாளர்கள் குன்னக்குடி வைத்தியநாதன், ஏ.கே. பழனிவேல் ஆகியோர் உள்ளிட்ட பலர்இவ்விழாவில் பங்கேற்கிறார்கள்.
பிப்ரவரி 1 ம் தேதி ஏககால லட்சார்ச்சணை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 2ம் தேதி சிறப்பு அர்ச்சனைகள்நடைபெறும்.
அனைத்து கலைஞர்களும் ஒருங்கிணைந்து பாடும் பஞ்சரத்ன கீர்த்தனைதான் ஆராதனை விழாவின் ஹைலைட்நிகழ்ச்சியாகும்.












Click it and Unblock the Notifications