சென்னையில் டீக்கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர் கைது
சென்னை:
சென்னையில் டீக்கடையை சூறையாடி டீக்கடை ஊழியர்களையும் தாக்கிய திமுக கவுன்சிலர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் 141வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் கென்னடி. இவரிடம் கார் டிரைவராகபணியாற்றுபவர் கருணா.
வேளச்சேரி மெயின் ரோட்டில் இருக்கும் கோபால் என்பவரது டீக்கடையில் கடனுக்கு டீ குடித்து விட்டு மொத்தமாகமாத சம்பளத்தில் பணம் கொடுப்பது கருணாவின் வழக்கம். ஆனால் சில மாதங்களாக கடன் பாக்கியைகொடுக்காமல் இருந்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வழக்கம் போல் அந்த டீக்கடைக்கு கருணா டீ குடிக்கச் சென்றுள்ளார். ஆனால்கடையின் ஊழியர்கள் பழைய பாக்கியை தராமல் மீண்டும் கடன் தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனால்அவர்களிடம் தகராறு செய்துள்ளார் கருணா.
பின்னர் கோபத்துடன் கென்னடியிடம் சென்ற கருணா, டீ கடைக்காரர்கள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக்கூறினார். இதையடுத்து கென்னடியும், கருணாவும் கோபாலின் கடைக்குச் செனறு டீக்கடையை அடித்து நொறுக்கிஅங்கிருந்த ஊழியர்களையும் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து இருவர் மீதும் கோபால் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த போலீசார் கவுன்சிலர்கென்னடி, கருணா ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications