ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 3வது வெற்றி

Subscribe to Oneindia Tamil

கான்பூர்:

கான்பூரில் இன்று (திங்கள்கிழமை) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதால், ஓவர்களின் எண்ணிக்கை 39ஆகக் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களான டிரஸ்கோத்திக்கும் நைட்டும் முதல் 10 ஓவர்கள் வரை நின்று நிதானமாக ஆடினர்.

ஆனால் 11வது ஓவரில் கும்ப்ளேயின் பந்தை அடித்த டிரஸ்கோத்திக், மோங்கியாவிடம் கேட்ச் கொடுத்துவெளியேறினார்.

அதன் பிறகு வந்தவர்கள் சரியாக விளையாடவில்லை. அதிகபட்சமாக நைட் மட்டும் 82 பந்துகளில் 74 ரன்கள்எடுத்திருந்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் 219 ரன்களை எடுத்திருந்தது.

இந்திய அணியின் அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைச்சாய்த்தனர். ஸ்ரீநாத்துக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியினர் துவக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை ஆடி, ரசிகர்களை ஆனந்தப்படுத்தினர்.

துவக்க ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கரும் வீரேந்திர சேவக்கும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின்பந்துகளைச் சிதறடித்தனர்.

இவர்கள் 2 பேர் அடித்த பந்துகளும் மாறி மாறி எல்லைக் கோட்டைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தன.

இந்நிலையில் 62 பந்துகளில் 82 ரன்களை எடுத்திருந்த சேவக், கோலிங்வுட்டின் பந்தை அடித்து ஹோக்கர்டிடம்கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

அடுத்து ஆடவந்த கேப்டன் கங்குலியும் ஓரளவு நிதானமாகவே ஆடினார். ஆனால் 26 ரன்கள் (32 பந்துகளில்)எடுத்த நிலையில் காபின் பந்தை இறங்கி ஆட முயற்சித்தபோது, க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த தினேஷ் மோங்கியா 17 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருந்தார். அவரும் டெண்டுல்கரும் (66பந்துகளில் 87 ரன்கள்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இறுதியில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 11,000 ரன்களைக் கடந்தது இன்றைய ஆட்டத்தின் சிறப்புஅம்சமாகும்.

மொத்தமுள்ள 6 ஒருநாள் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தைவிட இந்தியா முன்னணியில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+