மாஜி அமைச்சர் சுற்றுப் பயணத்தில் வன்முறை: கார்கள் எரிப்பு
திருநெல்வேலி:
நெல்லையில் சுற்றுப்பயணம் செய்த தமிழக முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம்கட்சியினருக்கும் வேறு மற்றொரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவரான கண்ணப்பன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென் மாவட்டங்களில்சுற்றுப்பயணம் செய்தார். காலையில் தூத்துக்குடியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் மாலையில் திருநெல்வேலிமாவட்டத்திற்கு வந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் அவரது கட்சிப்பிரமுகர் தொடங்கும் நிதிநிறுவன அலுவலகதுவக்கவிழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீராணம் பகுதி கிராமங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளில்பங்கேற்க சென்றார்.
வீராணம் பகுதியில் கண்ணப்பன் சென்றபோது அவருக்கு பின்னால் கார்களில் வந்த அவரது கட்சியினர்,குறிப்பிட்ட இன்னொரு ஜாதி பெயரை சொல்லி அந்த ஜாதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதியினர் கண்ணப்பன் ஆதரவாளர்கள் சென்ற வாகனங்கள்மீது கல் வீசி தாக்கினர். கண்ணப்பன் ஆதரவாளர்கள் வாகனங்கள் தனியாக வந்த போது அவர்களை மறித்துசரமாரியாக தாக்கினர்.
செயின் பறிப்பு, கார்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இதில் 2 கார்கள் முற்றிலுமாகதீக்கிரையாகின. அதில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். சில கார்களும், எட்டு வேன்களும் சேதமடைந்தன.
கண்ணப்பன் கார் முன்னதாக சென்று விட்டதால் அவரது கார் மட்டும் கல்வீச்சில் இருந்து தப்பியது. இருதரப்புமோதலால் அங்கு பதட்டம் நிலவியது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பகுதியில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை அறிந்த மக்கள் தமிழ்தேசம் கட்சியினர் சங்கரன்கோவில் பகுதியில் தளவாய்புரம்,சண்முகநல்லூர் ஆகிய கிரங்களில் பஸ்கள் மீது கற்கறை வீசித் தாக்கினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications