கரூர் அருகே தண்ணீர் கேட்டு சாலை மறியல்: விவசாயிகள் மீது போலீசார் தடியடி
கரூர்:
கரூர் அருகே காய்ந்து வரும் நெற்பயிர்களைக் காக்க தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி சாலை மறியல்நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 10,000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் பயிரிடப்பட்டது.பயிரிடப்பட்டபோது பொள்ளாச்சியில் இருந்து வரும் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது.
இங்குள்ள விவசாயிகள இந்த ஆற்று நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் அணையின் நீர்வரத்துதிடீரென குறைந்தது. எனவே அணையில் நீரை தேக்கி வைக்க அரசு முடிவு செய்தது.
இதனால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அமராவதி ஆற்றில் ஒரே முறை நீரை திறந்து விட்டால் கூட தற்போது காய்ந்து வரும் பயிர்களை காக்க முடியும்.அதனால் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரி விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கடந்த 22ம் தேதிமனு கொடுத்தனர். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனால் விவசாயிகள் உடனடியாக தீர்வு காண விரும்பி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) க. பரமத்தி யூனியனில் உள்ளவி. தண்ணீர்பந்தல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள்கலந்து கொண்டனர்.
இதனால் கோவை, தாராபுரம் வழியாக செல்லும் பஸ்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டது. போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி வற்புறுத்தினர்.
ஆனால் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இங்கு வந்து பேச வேண்டும் என்றுவிவசாயிகள் கூறினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்யப் போவதாக இன்ஸ்பெக்டர் நல்லியப்பன் கூறினார்.இதனால் விவசாயிகள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார்விவசாயிகள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் விவசாயிகள் சிதறி ஓடினர். ஆனால் போலீசார் அவர்களை துரத்தி துரத்தி அடித்தனர். இந்நிலையில்ஒருவர் போலீசார் மீது கல் வீசினார். இதனால் மேலும் கோபமடைந்த போலீசார் கண்மூடித்தனமாகவிவசாயிகளைத் தாக்கினர்.
மேலும் அந்தப்பகுதியில் இருந்த வீடுகளில் புகுந்து அங்கிருந்த ஆண்களை வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துவந்து போலீஸ் வேனில் ஏற்றினர்.
இதனால் பரமத்தி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications