கொல்கத்தா தாக்குதல்: 2 பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தில் தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த 2தீவிரவாதிகள் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஜார்க்கண்ட் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 22ம் தேதி அமெரிக்க மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

ஆப்தாப் அன்சாரி என்ற பர்ஹான் மாலிக் என்பவன் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளான். துபாயில் வசிக்கும்இவனுக்கு எதிராக சர்வதேச போலீசான இன்டர்போல் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலப் போலீசார் இன்று அதிகாலை 2 பாகிஸ்தான் தீவிரவாதிகளை போலீசார்வளைத்துப் பிடித்தபோது, அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தீவிரவாதிகளுமேகொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது இட்ரிஸ் என்ற முகம்மது ஜஹீத் மற்றும்சலீம் ஆகிய 2 பேர்தான் அந்தத் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

பீகார் போலீஸ் அதிகாரி கைது:

இதற்கிடையே மாலிக்குக்கு உதவியதாக ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பீகாரில் கைது செய்யப்பட்டார்.

ராம் ராஜ் என்ற அந்த சப்-இன்ஸ்பெக்டர்தான் 1999ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மாலிக் பாஸ்போர்ட்எடுப்பதற்கான விண்ணப்பத்தைச் சரிபார்த்து "ஓகே" சொல்லி கையெழுத்துப் போட்டிருந்தார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் கடத்தப்பட்டபோதே மாலிக்குக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவுசெய்துவிட்டனர். ஆனால் அதைச் சரி பார்க்காமலேயே அவனுக்குப் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று கூறி ராம் ராஜ்கையெழுத்துப் போட்டுள்ளார்.

ஆனால் போலீசார் விசாரணையின்போது, தன்னுடைய கையெழுத்தை வேறு யாரோ போட்டுள்ளனர் என்று ராம்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் பல போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+