மிருகக் காட்சி சாலைக்குள் சிங்கம் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே தேடப்பட்டு வந்த சிங்கம் வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்குள்ளேயே இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன் இந்த மிருகக் காட்சி சாலைக்கு அருகே இரவில் ஒரு சிங்கம் நடமாடியதை 2 பேர்பார்த்துவிட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மிருகக் காட்சி சாலை மூடப்பட்டு, சிங்கத்தைத் தேடும் பணிகள் தொடங்கின.

ஆனால் கடந்த 4 நாட்களாக அந்த சிங்கம் எங்கேயும் காணப்படவில்லை. ஆனால் வன அதிகாரிகளும்போலீசாரும் துப்பாக்கிகளுடன் சளைக்காமல் சிங்கத்தைத் தேடிக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் மிருகக் காட்சி சாலைக்குள்ளேயே அந்த சிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 170 வன அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த சிங்கத்தைச் சுற்றி வளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று (திங்கள்கிழமை) மாலைக்குள் சிங்கம் பிடிபட்டுவிடும் என்று மிருகக் காட்சி சாலை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+