தீவிரவாதிகளை ஒடுக்குகிறாராம் முஷாரப்
வாஷிங்டன்:
தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடுமையான நடவடிக்கைகளைஎடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாராட்டியுள்ளார்.
தீவிரவாத அமைப்புகளைக் களைந்தெறிவதில் முஷாரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு நல்ல ஆர்வம் காட்டிவருவதாகவும் புஷ் கூறியுள்ளார்.
தன்னுடைய உரையின்போது முஷாரப்பை அடிக்கடி பாராட்டிப் பேசிக் கொண்டே இருந்தார் புஷ்.
இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு மேலும் சிறிது காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் புஷ் வற்புறுத்தினார்.
இந்தியாவை தாக்கியது ஜெய்ஷ் அமைப்பு:
இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாதஅமைப்பினர்தான் என்று புஷ் கூறினார்.
ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹமாஸ், ஹெஸ்பொல்லா, இஸ்லாமிக் ஜிகாத் போன்ற தீவிரவாத அமைப்புகள் இன்னும்காடுகளிலும் பாலைவனங்களிலும் ஒளிந்து கொண்டு உலகம் பூராவும் தீவிரவாத நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளன என்றார் புஷ்.
ஆனால் சில நாடுகள் இத்தகைய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அவ்வாறு அவர்கள்நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்களே அந்த நடவடிக்கையை எடுத்து விடுவோம் என்றும் புஷ்எச்சரிக்கை விடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் எங்கள் ராணுவத்தினர் தீவிரவாதத்தை முழுமையாக ஒழித்துவிட்டனர். ஆனாலும் இன்னும் பலநாடுகளில் தீவிரவாதிகளின் முகாம்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் புஷ் கூறினார்.
அமெரிக்க அணு உலைகளைத் தகர்க்க திட்டமிட்ட ஆப்கான் தீவிரவாதிகள்:
இதற்கிடையே அமெரிக்க அணு உலைகளைத் தகர்ப்பதற்கு ஆப்கானிய தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்றுபுஷ் கூறினார்.
அமெரிக்க அணு உலைகளின் வரைபடங்கள் ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புஷ் கூறினார்.
இதற்குப் பிறகு தீவிரவாதிகள் மீதான எங்கள் தாக்குதால் மிகவும் தீவிரமானது என்றும் புஷ் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, ரஷ்யாவுடன் நல்லுறவு:
இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் தற்போது நல்ல உறவு நிலவி வருவதாக புஷ் கூறினார்.
முன்பு இந்த நாடுகள் எங்களுக்குப் பரம எதிரிகளாகத்தான் இருந்தன. ஆனால் இந்த 3 நாடுகளுடனும் இப்போதுநாங்கள் அமைதி ஏற்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றும் புஷ் தெரிவித்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications