எஸ்.எஸ். சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
பிரபல நகைச்சுவை நடிகரும் ராஜ்யசபா அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ். சந்திரன் நெஞ்சு வலி காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ். சந்திரன் கடந்த ஆண்டு அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குஏற்கனவே இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் ஓய்வே இல்லாமல் பொதுக் கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், டில்லிக்கும்தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வந்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு காஞ்சிபுரத்தில் நடக்க இருந்த கூட்டத்தில் பேசுவதற்காக அவர் சென்னையில்இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தார். காரில் டிரைவரும், அவரது செயலாளரும் மட்டுமே இருந்தனர்.
கார் தாம்பரத்தை தாண்டி வண்டலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சந்திரன் திடீரென்று நெஞ்சு வலிப்பதாககூறியுள்ளார். உடனே காரை சென்னைக்குத் திருப்பி விஜயா மருத்துவமனையில் அவரை விஜயாமருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பகலில் மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், சந்திரனைச் சந்தித்துஉடல் நலம் விசாரித்தார். அமைச்சர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு, ராமசாமி ஆகியோரும் மருத்துவமனைக்குச்சென்று உடல் நலம் விசாரித்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications