அப்துல் கலாமை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி
டெல்லி:
இந்திய ஏவுகணையின் தந்தையான அப்துல் கலாமைக் கொலை செய்யவும், கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின்டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைக் கடத்தவும், ஐ.எஸ்.ஐ ஆதரவு கொண்ட தீவிரவாதக் குழுதிட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு கொண்ட தீவிரவாத கும்பலான அப்தார் அன்சாரிகும்பல் பொறுப்பேற்பதாக அறிவித்தது. இக்கும்பல் இந்தியாவில் மேலும் பல சதி வேலைகளை நிறைவேற்றதிட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
இந்தத் தீவிரவாதிகள் குறித்து டெல்லி நகர குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான அப்துல் கலாம் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின்தந்தையாகப் போற்றப்படுகிறார். அவருடைய தொண்டு மூலம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.
கலாமைக் கொலை செய்ய வேண்டும் என்று அன்சாரி கும்பல் சதித் திட்டம் தீட்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல் கங்குலியைக் கடத்திச் சென்று டெல்லி திஹார் சிறையில் உள்ள லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதி முகமது அமீன் கான் உள்பட பல தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு அக்கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.
மேலும் டெண்டுல்கரைக் கடத்திச் சென்று தங்கள் தீவிரவாத குழுவுக்குத் தேவையான பணத்தை பறிப்பதற்கும்அந்தக் கும்பல் திட்டமிட்டுள்ளது.
இந்த அன்சாரி தீவிரவாதக் கும்பல் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த பல முறை முயன்றுள்ளனர். கலாம்செல்லும் பல இடங்களுக்கும் இந்த தீவிரவாதிகளும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களிடம்அப்போது போதுமான ஆயுதங்கள் இல்லாததால் அவரைக் கொல்ல முடியவில்லை.
அதேபோல் கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டையும் தீவிரவாதிகள் நோட்டமிட்டுள்ளனர். ஆனால்கோல்கத்தா போலீசாரை டெல்லி போலீசார் உஷார் படுத்தியதையடுத்து கங்குலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று (வியாழக்கிழமை) முதல் மும்பையிலுள்ள டெண்டுல்கர் வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீசார்காவலுக்குப் போடப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications