அமெரிக்க நிருபர் உயிருக்கு 24 மணி நேரம் கெடு
வாஷிங்டன்:
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அமெரிக்க நிருபரைக் கொன்றுவிடுவோம் என்று அவரைக் கடத்தியவர்கள் மிரட்டல் இ-மெயிலை அனுப்பியுள்ளனர்.
அவருடைய தலை மீது ஒருவன் துப்பாக்கியை வைத்து அழுத்திக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைஇ-மெயில் மூலம் "வால் ஸ்ட்ரீட்"டுக்கு அனுப்பிய தீவிரவாதிகள், தற்போது மற்றொரு இ-மெயில் மூலம் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க நிருபர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் க்யூபாசிறையில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்-கொய்தாவினரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்என்றும் அத்தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தலிபான் தூதரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்தீவிரவாதிகள் அந்த இ-மெயிலில் கூறியுள்ளனர்.
இந்த இ-மெயில் உலகின் பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாத்தின் ஏஜென்ட்தான் டேனியல் என்று அந்த இ-மெயிலில் தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இவர்களின் மிரட்டலுக்கெல்லாம் பயந்துவிடப் போவதில்லை என்று டேனியலின் மனைவி மேரியானாகூறியுள்ளார்.
கர்ப்பிணியான மேரியானாவும் ஒரு நிருபர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தீவிரவாதி கைது:
இதற்கிடையே டேனியல் கடத்தல் தொடர்பாக முபாரக் அலி ஷா கிலானி என்ற முஸ்லீம் தீவிரவாதியைபாகிஸ்தான் போலீசார் ராவல்பிண்டியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
கிலானியைச் சந்தித்துப் பேட்டியெடுக்கப் போவதாகத்தான் டேனியல் கடைசியாக மேரியானாவிடம் கூறிவிட்டுப்போயுள்ளார்.
லாகூரிலிருந்து செயல்படும் டான்ஸீம்-உல்-புக்ரா என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பின் தலைவன்தான் கிலானி.
கடந்த டிசம்பர் 22ம் தேதி பாரிசிலிருந்து மியாமிக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஷூ வெடிகுண்டு மூலம்அதைத் தகர்க்க முயற்சித்த ரிச்சர்ட் ரெய்ட் என்பவனுக்கும் இந்தத் தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புஇருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications