வீரப்பன் சரணடைய வாய்ப்பில்லை: விஜயகுமார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார்இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் தெரிவித்தார்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழக அதிரடிப் படையின் முன்னாள் ஐ.ஜியுமான விஜயகுமார்சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் வீரப்பன் தொடர்பாக விஜயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் வீரப்பன் சரணடைவது தொடர்பாக எந்தவிதமான தகவலும் வரவில்லை.
மேலும் 3 பேர் கொண்ட தூதுக் குழுவினர் காட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் எந்தத்தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.
வீரப்பன் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை. அவனை சரணடையச் செய்வதற்காக யாரும் தூது போகவேண்டிய அவசியமும் இல்லை.
அந்த அடர்ந்த காட்டுக்குள் வீரப்பனைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் என்றும் எனக்குத்தோன்றவில்லை.
சேத்துக்குளி கோவிந்தன் உள்பட 2 பேர் மட்டுமே வீரப்பனுடன் இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் அப்பகுதியில்உள்ள கிராம மக்களும் அதிரடிப் படையினருக்கு நன்றாக உதவுகிறார்கள்.
நான் சொந்த வேலையாக கோயம்புத்தூர் போயிருந்தேன். அப்போது சத்தியமங்கலம் காட்டுக்கும் சென்றேன்.அப்போது அதிரடிப் படையினருடன் சில முக்கியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டேன் என்றார் விஜயகுமார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications