தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 2வது வாரம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 2வது வாரம் தொடங்குகிறது என்று சபாநாயகர்காளிமுத்து இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய காளிமுத்து, தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதமத்தியில் கூடும் வாய்ப்புள்ளது என்றார்.
புதிய எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இந்தப் பட்ஜெட் கூட்டத்தில் ஜெயலலிதாவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதக் கடைசி வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications