நிருபர் கடத்தல்: தீவிரவாதிகள் கோரிக்கை நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரைக் கொன்று விடுவோம் என்றதீவிரவாதிகளின் மிரட்டலுக்குப் பணிய அமெரிக்கா மறுத்து விட்டது.

கடந்த வாரம் கராச்சியில் அமெரிக்க நிருபரான டேனியல் பேர்ல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி டேனியலின் புகைப்படத்துடன் கூடிய இ-மெயில்ஒன்றை அந்தத் தீவிரவாதிகள் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் கவுரவத்தைக் காக்கும் இயக்கம் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் அந்தத் தீவிரவாதிகள்,பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தலிபான் தூதரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ளஅமெரிக்க நிருபர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் போரில் கைது செய்யப்பட்டு, கியூபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்-கொய்தாமற்றும் தலிபான் கைதிகளை மனிதாபிமானத்துன் நடத்த வேண்டும் என்பதும் அந்தத் தீவிரவாதிகளின்நிபந்தனைகளில் அடக்கம்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 24 மணி நேரத்திற்குள் டேனியலைக் கொன்று விடுவோம் என்றுஅவர்கள் மிரட்டல் இ-மெயில் ஒன்றை நேற்று அனுப்பியிருந்தனர்.

ஆனால் அந்தத் தீவிரவாதிகளின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. நிபந்தனைஎதுவும் இல்லாமல் டேனியலை விடுவிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்தத் தீவிரவாதிகளுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் தாங்கள் தயாராக இல்லை என்றுஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.

கியூபாவில் உள்ள கைதிகள் மனிதாபிமானத்துடன்தான் நடத்தப்படுகின்றனர் என்று கூறிய பாவல், அந்தத்தீவிரவாதிகளின் மற்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

டேனியலைக் கண்டுபிடித்து மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளதுஎன்றும் பாவல் கூறினார்.

இந்தியாவுக்குத் தொடர்பு - பாக். புதுக் கதை:

இதற்கிடையே டேனியல் கடத்தப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று பாகிஸ்தான் திடீரென்றுகூறியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளரான ரஷீத் குரேசி நேற்று நிருபர்களிடம் இவ்வாறுதெரிவித்தார்.

ஆனால் இந்தியா இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்தப் புகார் கற்பனையானதுஎன்றும் கேலிக்குரியது என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+