ஆண்டிப்பட்டியில் ராணுவப் பாதுகாப்பு கேட்கிறார் கிருஷ்ணசாமி
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தொகுதியை பல்வேறுபகுதிகளாகப் பிரித்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இவர்களுக்குப் போட்டியாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர் ஆண்டிப்பட்டியில்குவிந்துள்ளனர். மதுரை மாவட்ட திமுகவினர் மு.க. அழகிரி தலைமையில் ஆண்டிப்பட்டி முழுவதும் பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சரான டி.ஆர். பாலுவும் இங்கேயே தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கருணாநிதி, ஜெ. பிரச்சாரம்:
திமுக தலைவர் கருணாநிதி வரும் 16ம் தேதி ஆண்டிப்பட்டியில் தனது கட்சியின் வேட்பாளர் வைகை சேகருக்குஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
ஜெயலலிதா வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.இதற்காக அவர் தேனியிலும் மதுரையிலும் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக மதிமுக தலைவர் வைகோ ஆண்டிப்பட்டியில் தனது வேட்பாளர் ஜெயச்சந்திரனுக்குஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ராணுவப் பாதுகாப்பு வேண்டும்: கிருஷ்ணசாமி
இந் நிலையில் ஆண்டிப்பட்டியில் தேர்தலை ஜனநாயக முறைப்படி அமைதியாக நடத்த வேண்டுமானால்ராணுவத்தை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதன்தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
தமிழக போலீசாரை நம்பி தேர்தல் பணிகளை நடத்த முடியாது என்று கூறிய அவர் இது தொடர்பாக தமிழக தேர்தல்ஆணையர் சாரங்கியிடம் பேசினேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மத்தியதேர்தல் கமிஷனிடம் ராணுவப் பாதுகாப்புக் கோரி மனு கொடுக்க உள்ளேன்.
எங்கள் கட்சியை உடைக்கும் வேலையில் அதிமுக இறங்கியுள்ளது. ஆனால், எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும்அதற்குத் துணை போகவில்லை. இதனால் எங்கள் கட்சியிலேயே இல்லாதவர்களைக் கொண்டு எனக்கு எதிராகஅறிக்கை விட வைத்துவிட்டு புதிய தமிழகத்தில் பிளவு என்கிறார்கள் அதிமுகவினர் என்றார் கிருஷ்ணசாமி.
மின்னணிக் கருவிகள்:
இந் நிலையில் ஆண்டிப்பட்டி தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருப்பதால் அதுகுறித்த செயல் விளக்கக் கூட்டம் தேனி நாயுடு மகாலில் நடந்தது. இதில் தேர்தல் பணியாளர்களுக்கு இந்தஎந்திரங்களின் செயல்பாடு குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் விளக்கினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications