உ.பி. தேர்தல்: அயோத்தி பிரச்சனையை ஒதுக்கும் பாஜக
Subscribe to Oneindia Tamil
லக்னொ:
உத்தரப் பிரதேச தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதில் ராமர் கோவில்பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமோ அல்லது பேச்சுவார்த்தை மூலமோ தான் தீர்வு காணப்படும் எனஅறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் கோவில் கட்டும் பணியை ஆரம்பிப்போம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ள நிலையில்பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இவ்வாறு கூறியிருப்பது இரு அமைப்புகளுக்கும் இடையிலான மோதலைமேலும் சிக்கலாக்கும் என்று தெரிகிறது.
அயோத்தி விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளும் மத்திய பா.ஜ.க. தலைமையின் திட்டத்துக்கு மாநிலத்தலைவர்களிடையே ஆதரவில்லை. இதன்மூலம் பிராமணர்கள், பனியாக்களின் ஆதரவை கட்சி இழக்க நேரிடும்என மாநிலத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications