சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய ஜோர்டன் விமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜோர்டனைச் சேர்ந்த விமானம் ஒன்று மிக அவசரமாக சென்னையில் தரையிறங்கியது. இதையடுத்து பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஏர் யுனிவர்சல் ஏர்கேப்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பயணிகள்விமானம் அவசரமாக சென்னை நோக்கி பறந்து வந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிகோரியது. ஆனால், அந்த விமானம் குறித்து எந்த விவரமும் தெரியாததால் அதற்கு தரையிறங்க அனுமதி தரஅதிகாரிகள் மறுத்தனர்.

விமானம் குறித்து விமானி தந்த விவரமும் போதுமான அளவில் இல்லை. ஆனால், விமானத்தில் எரிபொருள்இல்லை என்றும் எந்த நேரமும் தரையில் விழுந்து நொறுங்கலாம் எனவும் விமானி கூறினார்.

இதையடுத்து டெல்லியில் உயர் அதிகாரிகளை சென்னை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அவர்கள் அந்தவிமானத்தை தரையிறக்க அனுமதிக்குமாறு கூறினர். இதையடுத்து சென்னை அதிகாரிகள் அனுமதி தருவதற்குமுன்னதாகவே அந்த விமானம் சென்னை பழைய விமான நிலையத்தின் ரன்-வேயில் இறங்க ஆரம்பித்துவிட்டது.

மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே உள்ள இந்த பழைய விமான நிலையத்தின் ரன்வே சரக்குவிமானங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரன்வேயில் தரையிறங்கிய அந்த விமானத்தை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் உடனடியாகசுற்றி வளைத்தனர். அருகாமை ராணுவ முகாமில் இருந்த ராணுவக் காமாண்டோக்களும் உடனடியாக விமானநிலையத்துக்கு விரைந்து வந்து விமானத்தை முற்றுகையிட்டனர்.

விமானத்தில் இருந்து யாரையும் இறங்க அனுமதிக்க மறுத்த கமாண்டோக்கள் விமானத்துக்குள் அதிரடியாகநுழைந்தனர். விமானத்தில் ஆயுதங்களோ அல்லது தீவிரவாதிகளோ இருக்கிறார்களா என சோதனையிடப்பட்டது.அதில் ரகசிய கேமராக்கள் ஏதும் இருந்ததா எனவும் சோதனையிடப்பட்டது.

ஆனால், விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லை. விமானிகள் உள்பட 43 பேர் இருந்தனர். இவர்கள்அனைவருமே அந்த விமானத்தின் ஊழியர்கள் என்று தெரிகிறது.

விமானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த விவரம்:

இந்த விமானம் ஹஜ் பயணிகளை ஏற்றி வருவதற்காக பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு கடந்த மாதம் 26ம்தேதி சென்றிருக்க வேண்டும். ஆனால், மிகத் தாதமாக நேற்று தான் (2ம் தேதி) இந்த விமானம் டாக்கா சென்றது.மிகத் தாமதமாகச் வந்ததால் அந்த விமானம் தரையிறங்க டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அனுமதிமறுத்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மும்பைக்கு வந்துள்ளது. அங்குதரையிறங்க அனுமதி கோரியது. ஆனால், அனுமதி கிடைக்காததால் அந்த விமானம் நேராக இலங்கைக்குச்சென்றது. கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியது.

அங்கும் தரையிறங்க அனுமதி தர விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்துகடல் மீது சிறிது நேரம் வட்டமடித்த அந்த விமானம் எரிபொருள் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டதையடுத்துசென்னையை நோக்கி அந்த விமானம் வந்துள்ளது.

தொடர்ந்து பறக்க விமானத்தில் எரிபொருள் இல்லாததால் அந்த விமானத்தை சென்னையில் தரையிறக்கியதாகவிமானி கூறினார்.

இந்த விமானம் கடந்த 31ம் தேதி இந்தியாவின் மீது பறக்க அனுமதி வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஆனால்,நேற்று தான் இந்தியா மீது பறந்துள்ளது. இதற்கான அனுமதியை விமானம் பெறவில்லை.

அனுமதி இல்லாமலேயே இந்திய வான் வழியாக ஜோர்டனில் இருந்து டாக்கா சென்றுள்ளது. அதே போல மீண்டும்மும்பைக்கும் அனுமதியின்றி வந்தது. அங்கிருந்து இலங்கை சென்றுவிட்டு அனுமதியில்லாமல் சென்னைக்குவந்துள்ளது.

தனது அனுமதியில்லாமல் ஜோர்டன் விமானம் தன் வான் வெளியில் பறந்ததற்கு அந் நாட்டிடம் இந்தியா எதிர்ப்புத்தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உடனடியாக பிரதமர் வாஜ்பாய்க்கும்தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து முழு விசாரணை நடத்த பிரதமர் விமானத்துறைக்கும், இந்திய விமானப்படைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் துரிதகதியில் நடந்து முடிந்துள்ளன. விமானம் எந்தவிதமான தீய எண்ணத்துடனும் இந்தியவான்வெளியில் பறக்கவில்லை என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து அந்த விமானம் திரும்பப்பறந்து செல்ல அனுமதி தரப்பட்டுவிட்டது. அது மீண்டும் டாக்காவுக்கே செல்லும் என்று தெரிகிறது.

ஜோர்டன் நாடு இந்தியாவின் நட்பு நாடு என்பதால் பிரச்சனையை சிக்கலாக்க வேண்டாம் என வெளியுறவுத்துறைகூறிவிட்டதாகத் தெரிகிறது.

செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் விமானத் தாக்குதலுக்குப் பின் எந்த நாடும் அடையாளம் தெரியாத எந்தவிமானத்தையும் தங்கள் நாட்டின் மீது பறக்கவோ, தங்கள் விமான நிலையங்களில் தரையிறங்கவோ அனுமதிமறுத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+