ஹஜ் யாத்திரை: சென்னையில் இருந்து முதல் கட்டமாக 410 பேர் பயணம்
சென்னை:
சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 410 ஹஜ் யாத்ரீகர்கள் தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றனர்.
முஸ்லீம்களின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. வரும் தோறும் இந்த புனிதப் பயணம் பக்ரீத்பண்டிகையையொட்டி நடக்கும். இந்த முறை தமிழகத்திலிருந்து 2,800 பேர் ஹஜ் யாத்திரை செல்கின்றனர்.
இவர்களில் முதல் பிரிவில் 410 பேர் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர்.
இரவு 10.40 மணிக்கு இந்த முதல் விமானம் கிளம்பியது. தமிழக ஹஜ் கமிட்டித் தலைவர் அமைச்சர் அன்வர்ராஜா, செயலாளர்அலாவுதீன், லியாவுதின் சேட் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் அடங்கிய குழு புனித யாத்திரை செல்பவர்களை வாழ்த்தி வழிஅனுப்பினர்.
புனித யாத்திரை செல்பவர்கள், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு சென்று அங்கிருந்து மெக்கா செல்கிறார்கள்.மெக்காவில் 5 நாள் வழிபாடு நடத்திய பின் மெதீனா செல்கிறார்கள். அங்கு பக்ரீத் பண்டிகை முடியும் வரை தங்கியிருந்துவழிபாடுகள் நடத்துவார்கள்.
அதன் பின்னர் ஜெட்டா வந்து பின்னர் சென்னை திரும்புவார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications