அமெரிக்க நிருபர் கடத்தல்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்காவின் வால்ஸ்டீரீட் ஜர்னல் பத்திரிக்கையின்நிருபர் டேனியேல் பியர்ள் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன.
இவர்கள் பாகிஸ்தானில் இருந்து ஈ-மெயில் மூலம் தான் அமெரிக்க அரசுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.டேனியேலை விடுவிக்க 2 மில்லியன் டாலர் பணத்தை தீவிரவாதிகள் கோருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியது.இது தொடர்பாக கராச்சியில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்துடன் தீவிரவாதிகள் தொலைபேசியில்பேசியதாக வந்த தகவலை உறுதி செய்ய அமெரிக்கா மறுத்துவிட்டது.
இந் நிலையில் டேனியேல் கொல்லப்பட்டுவிட்டதாகவும் சில மெயில்கள் வால்ஸ்டீரீட் ஜர்னல் பத்திரிக்கைக்குவந்துள்ளன.
அவரது உடலை கராச்சியில் மயானம் ஒன்றில் எறிந்துவிட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்தாக வரும்செய்திகளையடுத்து பல்வேறு மயானங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 நாட்களுக்கு முன் அவர் கடத்திச் செல்லப்பட்டார்.
இந்தியா கடத்தியதாக பாகிஸ்தான் புகார்:
இந் நிலையில் இந்தக் கடத்தலில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் ராணுவத் செய்தித் தொடர்பாளர்கூறியதை கேவலமான கற்பனை என்று இந்தியா வர்ணித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறுகையில், கடத்தலில் தொடர்புடையதாகக்கருதப்படும் தீவிரவாத அமைப்பின் தலைவன் இந்தியாவில் முக்கியமான ஒருவருடன் தொலைபேசி மூலம்பேசியுள்ளான். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பலருடன் அவன் பேசியுள்ளான் என்றார்.
இந்தியாவில் யாருடன் இந்தத் தீவிரவாதி பேசினால் என்ற விவரத்தை பாகிஸ்தான் வெளிப்படையாக கூறவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறினார். பாகிஸ்தான் இதுதொடர்பாக விவரம் தந்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறிய நிருபமா, அதைவிட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் இந்தியாவுக்கு இந்தக் கடத்தலில் தொடர்புள்ளதாகக் கூறுவதுநகைப்புக்குரியது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications