சென்னையைக் கலக்கிய ரெளடி காஷ்மீரில் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாமீனில் விடுதலையாகி 6 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த ரெளடி ஒருவன்காஷ்மீரில் கைது செய்யப்பட்டான்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவன் அய்யப்பன். இவன் அப்பகுதியின் பிரபல ரெளடி. கடந்த 1993ம்ஆண்டு கொலை வழக்கு தொடர்பாக 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் அய்யப்பன். பின்னர் 1996ல் ஜாமீனில் வெளி வந்தான்.

ஜாமீனில் வந்தவுடன் தலைமறைவாகி விட்டான். அவனை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். ஆனால்அய்யப்பன் போன இடம் தெரியவில்லை. இந்நிலையில் காஷ்மீரில் ஸீரோ கேட் என்ற இடத்தில் அய்யப்பன்பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் மெளரியா தலைமையிலான போலீஸ் குழு காஷ்மீர் விரைந்தது. அங்குதலைமறைவாக வாழ்ந்து வந்த அய்யப்பனை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

போலீசாரைப் பார்த்ததும் அய்யப்பன் தப்ப முயன்றுள்ளான். ஆனால் ஓடினால் சுடப்படுவாய் என்று போலீஸ் குழுதுப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதும் தப்பும் முயற்சியை கை விட்டுள்ளான் அய்யப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+