வீரப்பன் விவகாரம்: பத்திரிக்கைகள் மீது நரேஷ் குப்தா கோபம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தை பத்திரிக்கைகள் தேவையில்லாமல் பெரிதுப்படுத்துவதாக தமிழகஉள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.

வீரப்பன் சரணடைய முடிவு செய்துள்ளதாகவும், அவனை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளதாகவும்நாளுக்கு நாள் செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.

இது குறித்து நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில்:

பத்திரிக்கைகள், வீரப்பன் விவகாரத்தைப் பெரிதுப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் வீரப்பனைப் பிடிக்கும்நடவடிக்கையைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு சொல் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வீரப்பனைப் பற்றி ஏதாவது முக்கியமான பெரிய விஷயம் இருந்தால் கண்டிப்பாக பத்திரிக்கைகளுக்கு தெரியப்படுத்துவோம்.

கர்நாடக அதிரடிப்படைக்கும் தமிழக அதிரடிப்படைக்கும் இடையே நல்ல ஒற்றுமை நிலவி வருகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் இருந்து விலகியதால், வீரப்பனைப் பிடிக்கும்பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நரேஷ் குப்தா கூறினார்.

சமீபத்தில் பணம் வைத்திருப்பதாக கைது செய்யப்பட்ட வீரப்பனின் உறவினர்கள் 18 பேர் மற்றும் அவர்களிடம்இருந்த பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 லட்சம் பற்றிக் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் நேரடியாக பதில்சொல்லவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+