கூட்டாளியை வைத்து வீரப்பனைப் பிடிக்க முயற்சி
சென்னை:
அதிரடிப்படை போலீசாரின் பிடியில் சிக்கிய சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளியை வைத்து வீரப்பனைப்பிடிக்க தமிழக, கர்நாடக அதிரடிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதேஸ்வரன் மலையில் ஒளிந்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்துஅதிரடிப்படை போலீசார் அப்பகுதியில் முற்றுகையிட்டுள்ளனர். வீரப்பனைப் பிடிக்க பல்வேறு உத்திகளைஅவர்கள் கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசாரிடம் கைதான சின்னக் கொண்டான் என்ற வீரப்பனின் கூட்டாளி மூலம் போலீசாருக்குசில தகவல்கள் கிடைத்தன.
அந்தத் தகவலின் அடிப்படையில் வீரப்பனுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்து கொடுக்கும்ஒருவர் குறித்து போலீசாருக்குத் தெரிய வந்தது. அவரைப் பிடித்தால் வீரப்பன் தொடர்பான பல தகவல்கள்கிடைக்கலாம் என்று சின்னக் கொண்டான் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் கொங்கரப்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்ற அதிரடிப்படை போலீசார் அங்குசின்னக் கொண்டான் கூறிய நபரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் அவரும் வீரப்பனின் கூட்டாளிதான்என்பது தெரிய வந்தது.
அவர் பல தகவல்களை போலீசாருக்குத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் முக்கிய தகவல்களைப்பெறுவதற்காக மாதேஸ்வரன் மலை அதிரடிப்படை முகாமிற்கு அந்த நபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வீரப்பனுடன் தற்போது 3 பேர் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது என அதிரடிப்படை வட்டாரத்தில்கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications