தீவிரவாதத்தை திமுக எப்போதும் ஆதரித்ததில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் திமுக ஆட்சி எப்போதும் ஆதரித்தது இல்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று (திங்கள்கிழமை) கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சியில் தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் எப்போதும் ஆதரித்தது இல்லை.

1996-2002ம் ஆண்டு நடந்த ஆட்சியில் விடுதலைப்புலிகள் மற்றும் அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 247 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 16 பேர் விடுதலைப்புலிகள். இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள்மற்றும் 60 லட்சம் மதிப்புள்ள இலங்கை கள்ள நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்களும், மக்கள் யுத்தக் கழகத்தைச்சேர்ந்த 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த தமிழ்நாடு விடுதலைப்படையின் முக்கியத் தலைவர்களும் திமுகஆட்சியில் தான் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த இயக்கத்தைச் சேர்ந்த பொன்பரப்பி ராஜேந்திரன், ரேடியோவெங்கடேசன், மாறன் போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+