இலங்கையில் சுதந்திர தின கொண்டாட்டம்
கொழும்பு:
இலங்கையில் இன்று (திங்கள்கிழமை) 54வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இனப்பிரச்சனைத் தீர்வு காணும் அரசியல் கலாச்சாரம் இப்போதைய தேவை என்று சந்திரிகா கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தான் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை தொடரப்போவதாகவும், இது தொடர்பாக தற்போதைய ரணில் விக்கிரமசிங்கேயின் அரசுக்கு தன்னுடைய அனைத்துஉதவிகளையும் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சந்திரிகா தெரிவித்தார்.
பின்னர் 21 குண்டுகள் முழக்கத்துடன் தொடங்கி நடந்த ராணுவ அணிவகுப்பையும் சந்திரிகா பார்வையிட்டார்.
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிக்கைகள் பிறந்துள்ளன என்றும் இதன்மூலம் நாட்டில் மீண்டும்அமைதி நிலவும் என்றும் பிரதமர் ரணில் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2,500 கைதிகள் விடுதலை:
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறு குற்றங்கள் காரணமாக இலங்கை முழுவதிலும் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள 2,500 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதாக சந்திரிகா ஏற்கனவே இதற்கான உத்தரவைப்பிறப்பித்து விட்டார்.
சென்னையில் கொண்டாட்டம்:
இதற்கிடையே சென்னையில் இலங்கை சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கை கொடி ஏற்றப்பட்டு, அந்நாட்டுப் பிரதமர் ரணிலின் சுதந்திரதின உரை வாசிக்கப்பட்டது.
இவ்விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications