சென்னையில் பட்டப்பகலில் அரசு ஊழியர் அரிவாளால் வெட்டிக் கொலை
சென்னை:
சென்னை ஒயிட்ஸ் ரோடில் வெளிநாட்டு வர்த்தக மைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரை ஆட்டோவில்வந்த மர்ம கும்பல் இன்று (திங்கள்கிழமை) காலை வெட்டிக் கொலை செய்தது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் ரோட்டில் வெளிநாடு வர்த்தக மைய அலுவலகம் ஒன்று உள்ளது.இங்கு ஏகாம்பரம் என்ற ஒருவர் வேலை பார்த்து வந்தார்.
இவர் கே.கே. நகரில் குடியிருக்கிறார். அங்கு அவர் பொது மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மேலும்அந்தப் பகுதியில் உள்ள ரவுடிகளைப் பற்றியும் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஒயிட்ஸ் ரோடில் உள்ள அலுவலகத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார்.அலுவலகத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாளால்அவரைத் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.
இந்தத் தாக்குதலால் ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் திருவல்லிக்கேணி போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு ரவுடிதான் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று கருதும் போலீசார்,கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications