ஜெ. க்கு கொலை மிரட்டல் விடுத்த ப்ளஸ் 2 மாணவனுக்கு 15 நாள் காவல்
நாகர்கோவில்:
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்விடுத்த ப்ளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
ஜெயலலிதாவுக்கும், கல்வி அமைச்சர் தம்பித்துரைக்கும் சமீபத்தில் இ-மெயி மூலம் கொலை மிரட்டல்கள் வந்தன.
இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாகர்கோவிலில் உள்ள 3 இ-மெயில் பிரவுசிங்சென்டர்களைக் கைப்பற்றி சீல் வைத்தனர். இங்கிருந்துதான் ஜெயலலிதாவுக்கு இ-மெயில் அனுப்பப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரகசிய போலீசார் 40க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் 2 பேர்முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் பாலு என்ற ப்ளஸ் 2 மாணவன்தான் தன்னுடைய நண்பனின் பெயரில் இந்த இ-மெயிலைஅனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
பாலுவின் தந்தை நாகர்கோவிலில் பிரபல மருத்துவர். இவனும் மருத்துவப்படிப்புக்காக முயற்சி செய்தான். ஆனால்ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. அதனால் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காகப் படித்து வந்தான்.
இந்நிலையில் இம்ப்ரூவ்மெண்ட்டுக்கு அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக அரசுஅறிவித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலு, கல்வி அமைச்சர் தம்பித்துரைக்கும், ஜெயலலிதாவுக்கும் இ-மெயில் மூலம்கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.
இதையடுத்து பாலுவை போலீசார் வடசேரியில் வைத்துக் கைது செய்தனர். பிறகு திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதிமுத்துக்கிருஷ்ணன் முன்னிலையில் அவன் ஆஜர் படுத்தப்பட்டான்.
விசாரணை நடத்திய பின், பாலுவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி முத்துக்கிருஷ்ணன்உத்தரவிட்டார்.
இதன்படி பாலு திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications