விரைவில் மத்திய அமைச்சராகிறார் திருநாவுக்கரசு
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ள எம்ஜிஆர் அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசுக்கு பல்வேறுஉறுதிமொழிகளை பாரதீய ஜனதாக் கட்சி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் எம்.ஜி.ஆர். அதிமுக கடந்த 1ம் தேதி பாரதீய ஜனதாக் கட்சியில்இணைந்தது. இந்த இணைப்பு தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கு மிகப் பெரும் பலத்தைத் தேடித் தரும் என்றுபா.ஜ.க. தலைமை கருதுகிறது.
இதையடுத்து திருநாவுக்கரசுக்கு சந்தோஷம் தரும் வகையில் பல்வேறு உறுதிமொழிகளை பா.ஜ.க.கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி விரைவில் திருநாவுக்கரசு மத்திய இணை அமைச்சராக்கப்படுவார். அவருக்கு நல்லதொரு துறை ஒன்றுஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
எம்.ஜி.ஆர். அதிமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த நடிகை லதாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவிஅளிக்கப்படும். அவரது கலைத்துறை சேவையைக் கருத்தில் கொண்டு இந்த பதவி அளிக்கப்படுகிறது.
இதுதவிர எம்.ஜி.ஆர். அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலருக்கும் அகில இந்திய அளவில் முக்கியமானவாரியங்கள் அல்லது கழகங்களில் பொறுப்பு அளிக்கப்படும்.
திருநாவுக்கரசை பா.ஜ.க.வுக்குக் கொண்டு வருவதில் பிரமோத் மகாஜன், வெங்கையா நாயுடு ஆகியோர் முக்கியப்பங்கு வகித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இணைப்பு விழாவுக்குப் பின் திருநாவுக்கரசு மும்பை சென்று விட்டார். அங்கு நடக்கும் மாநகராட்சித் தேர்தலில்பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications