சிங்கத்தைப் பிடிக்க வண்டலூரில் 2 கி.மீ.க்கு இரும்பு வேலி
சென்னை:
வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் நடமாடி வரும் சிங்கத்தைப் பிடிப்பதற்காக 2 கி.மீ. சுற்றளவுக்கு இரும்பு வேலிஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள கேளம்பாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற 2 பேர் சாலையில் சிங்கத்தைப் பார்த்ததாக மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் தெரிவித்தனர்.
ஆனால் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களின் எண்ணிக்கை சரியாக இருந்தது. அதனால் கடந்த 10நாட்களுக்கும் மேலாக அந்த மிருகத்தைத் தேடும் பணியில் போலீசாரும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மிருகக்காட்சி சாலை காலவரையறை இன்றி மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த மிருகம் மான்கள் இருக்கும் பகுதியில் நடமாடுவதாக சில தடயங்கள் வனத்துறைஅதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. இந்தப் பகுதிகளில் 2 மான்கள் அந்த மிருகத்தால் அடித்துக் கொல்லப்பட்டதாகமிருகக்காட்சி அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் அந்த மிருகத்தைப் பிடிப்பதற்காக இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இது பற்றிமிருகக்காட்சி சாலை இயக்குனர் தியாகி கூறியதாவது:
அந்த மிருகம் நடமாடும் பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் ஊழியர்கள் அந்த மிருகத்தைக் கண்டும்அவர்களால் சுட முடியவில்லை.
அதனால் அது நடமாடும் பகுதியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் 10 அடி உயரத்துக்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணி இன்று (திங்கள்கிழமை) மாலைக்குள் முடிவடைந்து விடும். விரைவில் அந்த மிருகத்தைப்பிடித்து விடுவோம். கிராமத்தினர் 5,000 பேரை வைத்துக் கொண்டு வனத்துறையினர் அந்த மிருகத்தை தேடியதாகவரும் செய்திகள் தவறானவை என்றார் தியாகி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications