பன்னீருக்கு 16வது இடம்: ஜெ.க்குப் பாத்தியப்பட்டது - கருணாநிதி
சென்னை:
ஒரு வாரப் பத்திரிக்கையின் கணக்கெடுப்பில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு 16வதாகக் கொடுக்கப்பட்டஇடம் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்குப் பாத்தியப்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக கருணாநிதி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு வாரப் பத்திரிக்கை பன்னீர்செல்வத்தை 16வது இடத்திற்குத் தள்ளியுள்ளது. அவர் பெயருக்குத்தான் தமிழகமுதல்வராக உள்ளார்.
பல்வேறு தூதரக அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர்களுடன் சந்திப்பு நடத்தி வரும் ஜெயலலிதா தற்போதுபன்னீர்செல்வத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே பன்னீருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 16வது இடம் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்குத்தான்பாத்தியப்பட்டது.
"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்பது போன்ற பல சிறப்புக்களைப் பெற்றுள்ள இந்த 16ம் எண் தற்போதுபன்னீர்செல்வத்துக்கு வாய்த்துள்ளது என்று கருணாநிதி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications