நாளை அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்குமா? - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) பேச்சு நடந்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பல்வேறு விஷயங்கள்குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
அரசு தரப்பில் நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் பி.சங்கர், நிதித்துறை செயலாளர் சந்தானம், ஐ.ஏ.எஸ்.அதிகாரி மெய்கண்ட தேவன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். அரசு ஊழியர்கள் சார்பில் 12 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிவில் எந்தவித இணக்கமான முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து புதன்கிழமையும்தொடர்ந்து பேச இரு தரப்பினரும் முடிவு செய்தனர். இன்று பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை மீண்டும்தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தை தோல்வி அடையவில்லை எனவும் கூறிய அரசு, அனுதாபத்துடன் ஊழியர்கள் பிரச்சினை குறித்து கேட்டது.
புதன்கிழமைக்குள் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று பொன்னையன் நம்பிக்கை தெவித்தார். அரசு ஊழியர் கூட்டமைப்புத்தலைவரான சூரியமூர்த்தியும் இதே கருத்தையே பிரதிபலித்தார்.
ஸ்டிரைக்கை எதிர்த்து வழக்கு நாளை விசாரணை:
இதற்கிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதானவிசாரணையை 7ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சட்ட விரோதம் என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன்பெஞ்ச் வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications