தமிழ் பயிற்று மொழியை அரசு எதிர்க்கக் கூடாது: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்பயிற்று மொழி திட்டத்தை திமுக அறிமுகப்படுத்தியது என்பதற்காக அதிமுக அரசு எதிர்க்கக் கூடாது என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வகுப்புகளை தாய் மொழியிலேயே கற்றால்தான் மாணவர்களுக்குஎளிமையாகவும், தமிழ் மொழியை மேம்படுத்துவதாகவும் இருக்கும்.
தமிழ் பயிற்று மொழித் திட்டத்தை திமுக தான் அறிமுகப்படுத்தியது என்பதற்காக அதிமுக அரசு அதை எதிர்க்கக்கூடாது. அப்படி செய்தால் அது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
தமிழ் பயிற்று மொழிக்காக உச்ச நீதிமன்றத்தில் மேல் மூறையீடு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு எதிராக வந்தால்அதிமுக அரசு அதை எதிர்த்து போராட வேண்டும் என்று ராமதாஸ் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications