சேலத்தில் பெண் கொலை: ரூ.20 லட்சம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் கொள்ளைக் கும்பல் ஒன்று வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்ணைக் கொலை செய்து, ரூ.20லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளது.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி (65). இவரது கணவர்இறந்து விட்டார். இவருக்கு கல்யாணமான 4 மகள்கள் உள்ளனர். இதில் கீதா என்ற மகள் மட்டும் இவரது வீட்டுக்குஅடுத்த வீட்டில் வசிக்கிறார்.

அனந்தலட்சுமி சொந்த வீட்டில் தனியாக இருந்துக் கொண்டு வட்டித் தொழில் செய்து வருகிறார். இதனால் அவரதுவீட்டில் ரொக்கப்பணம், தங்க நகைள், வெள்ளிக் கட்டிகள் வைத்துள்ளார். மேலும் 4 பெண்களின்தங்கநகைகளையும் 2 பீரோக்களில் பாதுகாத்து வந்துள்ளார்.

இவரது வீட்டில் வேலை பார்க்கும் தனம் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல் வேலைக்குச்சென்றுள்ளார். அப்போது கதவு திறந்தே கிடந்ததால் உள்ளே சென்றுள்ளார்.

அங்கு அனந்தலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்தார். பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.இதனால் பயந்து போன தனம் பக்கத்து வீட்டில் இருந்த அனந்தலட்சுமியின் மகள் கீதாவிடம் தகவல்கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அனந்தலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்துக் கொண்ட கொள்ளை கும்பல், திங்கள்கிழமை இரவுவீட்டின் ஜன்னல் கதவை கைவிட்டு திறந்து, வீட்டில் புகுந்து அனந்தலட்சுமியை உருட்டுக் கட்டையால்தாக்கியுள்ளது.

பிறகு அவரிடம் இருந்து சாவிக்கொத்தை எடுத்துக் கொண்டு பீரோவில் இருந்த பணம், நகைகளைக்கொள்ளையடித்து விட்டு, பிறகு கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டுத் தப்பியதாக போலீஸ் விசாரணையில்தெரிய வந்துள்ளது.

அனந்தலட்சுமி வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரொக்கப்பணம், தங்கநகைகள், வெள்ளிக்கட்டிகள்கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் அவர்கள் உறவினர்களே கூடஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+