காஷ்மீர் எப்போதும் இந்தியாவுக்குத்தான்: வாஜ்பாய்
பெரோஸ்பூர்:
பாகிஸ்தான் எவ்வளவுதான் காஷ்மீர் தினத்தைக் கொண்டாடினாலும் காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருபகுதிதான் என்றும் அதை நம்மிடமிருந்து அந்த நாட்டால் பிரிக்கவே முடியாது என்றும் பிரதமர் வாஜ்பாய் இன்று(புதன்கிழமை) கூறினார்.
இதையொட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப், காஷ்மீர்தீவிரவாதத்தை வழக்கம்போல் சுதந்திரப் போராட்டம் என வர்ணித்தார்.
மேலும் தீவிரவாதிகள் விவகாரத்தில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது நெருக்குதல் அதிகரித்து வந்தாலும்காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு தொடர்ந்து உதவுவோம் எனவும் முஷாரப் திமிராகக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வாஜ்பாய்,அவர்களால் காஷ்மீர் தினத்தைத்தான் கொண்டாட முடியுமே தவிர ஒருநாளும் அவர்கள் காஷ்மீரைப் பெறவேமுடியாது என்றார்.
எல்லையில் நாம் குவித்துள்ள ராணுவம் பாகிஸ்தானைத் தாக்குவதற்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ அல்ல;நம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான் என்றும் வாஜ்பாய் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால், அடுத்த நாளே அந்நாட்டுடன் பேசுவதற்குஇந்தியா தயாராக உள்ளது என்றும் பிரச்சாரக் கூட்டத்தில் வாஜ்பாய் பேசினார்.
நான் பிரதமரான நாளிலிருந்தே பாகிஸ்தானுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்ற நோக்கில்தான் லாகூருக்கு பஸ்போக்குவரத்து உள்பட பல அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால் அவர்கள் கார்கில்போரைத்தான் எனக்குப் பரிசாகத் தந்தார்கள் என்றும் வாஜ்பாய் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications