அரசுக் கல்லூரி மாணவர்களின் "பஸ் தின" அட்டகாசங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அரசுக் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தொடருகிறது.

கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பஸ் தினம் என்ற பெயரில் தங்கள் கல்லூரி வழியாக செல்லும்பஸ்களுக்கு அலங்காரம் செய்து, டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது வழக்கம்.

இந்த நட்புறவு வழக்கம் தற்போது வன்முறையின் பிறப்பிடமாக மாறியுள்ளது. குறிப்பாக சென்னையில் பஸ் தினம்என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் மாணவர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்கள்புகார் கூறுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி மாணவர்கள் இதேபோல பஸ் தினம் என்ற பெயரில்கொண்டாடியபோது அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பஸ்களின் மேல் மாணவர்கள் அமர்ந்து கொண்டும், டிரைவருக்கு சாலையே தெரியாத வகையில் பூக்களால்அலங்கரித்தும், சாலைகளில் சென்ற பெண்கள், மாணவிகளை கேலி செய்தும் பொதுமக்களின் முகச் சுளிப்பைவாங்கிக் கட்டிக் கொண்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள மற்றொரு அரசுக் கல்லூரியான நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள், பஸ்தினம் கொண்டாட மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ்களை வழங்காததால், பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி,கண்ணாடிகளை உடைத்து வன்றையில் ஈடுபட்டனர்.

பஸ் தினம் கொண்டாட தனி பஸ்களை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் மாணவர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் கடந்த கால சம்பவங்களை மனதில் கொண்டு தனி பஸ்கள் வழங்க இயலாது என்றுபோக்குவரத்துக் கழகம் மறுத்து விட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், வழக்கமான பஸ்களில் ஏறிக் கொண்டனர். 100க்கும் மேற்பட்டமாணவர்கள் இரண்டு பஸ்களில் பயணித்தனர்.

அந்த பஸ்களில் வழக்கமான பயணிகளும் இருந்தனர். பஸ்களில் ஏறிய மாணவர்கள் பாட்டுப் பாடியும்,சாலைகளில் போவோரைக் கேலி செய்தவாறும் பயணித்தனர். இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகினர்.

பஸ்கள், கல்லூரி அருகே வந்ததும் மாணவர்கள் பஸ்களை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். அதன் பிறகு திடீரெனதாங்கள் வந்த பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.

திடீரென நடந்த இந்தக் கல்வீச்சால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் கீழே இறங்கி ஓடினர். இதனால்அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து சில மாணவர்களைக் கைது செய்தனர். கல்வீச்சில் இறங்கியமாணவர்களை விரட்டியடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+