ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் தேர்தல் நேர தெருக்கூத்து: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டியில் அதிமுகவினர் தேர்தல் நேரத்து தெருக்கூத்து நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது.
ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்து, ஜெயலலிதா போட்டியிட வழிவிட்டாரோஅன்றே அந்த தொகுதி மட்டும்தான் தமிழகம் என்ற அளவுக்கு திட்டங்கள் துவக்கப்பட்டு விட்டன.
கடந்த திமுக ஆட்சியில் அந்த தொகுதியின் அடிப்படை வசதிகள், கல்வி வசதிகள் போன்றவை செய்யப்படாமல்இருந்ததைப் போலவும், அதிமுகவினர்தான் இப்போது அவற்றைச் செய்து கொடுத்திருப்பதைப் போலவும் தேர்தல்நேரத்து தெருக் கூத்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் திடீரென்று கூறப்படும் பொய்கள் மூலம் தமிழக மக்களிடம் அனுதாபத்தை பெற்று விடலாம்என்று நினைப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.
இதே போல் தான் கடந்த தேர்தலின் போது, என்னை கருணாநிதி தேர்தலில் நிற்க விடாமல் சதி செய்து விட்டார்என்று ஜெயலலிதா கண்ணீர் விட்டதால் மக்கள் ஏமாந்து அவரது கட்சிக்கு வாக்களித்தனர்.
ஆண்டிப்பட்டி தேர்தலில் ஆட்சியாளர்கள் மீது மக்கள் எவ்வளவு வருத்தத்தில் இருக்கின்றனர் என்பதை உணர்த்தும்வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியினர் செல்லும் வழி சரியான வழியல்ல என்பதை சுட்டிக்காட்டும் வகையில் மக்கள் திமுகவுக்குவெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications